கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள நாகொண்டபள்ளி பகுதியில் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை, தெரு நாய் பல்வேறு பகுதிகளில் கடித்து குதறிய நிலையில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.