ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ருக்மணி. இவர்களின் 1½ வயது மகன் மகேஸ்வர் மாலிக். இவர்கள் குடும்பத்துடன் பேரிகை அருகே மெனசின்தொட்டி பகுதியில் தங்கி கிருஷ்ணன் அந்த பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்வம் அன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மகேஸ்வர் மாலிக் தண்ணீர் என நினைத்து பினாயிலை குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் இது குறித்து தாய் ருக்மணி பேரிகை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.