மெக்கானிக் கடையில் 5 டூவீலர்கள் எரிந்து சேதம்.

57பார்த்தது
மெக்கானிக் கடையில் 5 டூவீலர்கள் எரிந்து சேதம்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மரூப் கான் (32) இவர் டூவீலர் மெக்கானிக். இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவம் அன்று அதிகாலை மின் கசிவு ஏற்பட்டு கடையில் தீப் பிடித்துள்ளது. இது குறித்து மரூப்கானுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். அவர் கடைக்கு விரைந்து வந்து பார்தத போது கடையில் நிறுத்தி வைத்திருந்த 5 டூவீலர்கள் எரிந்து சேதமடைந்தது இது குறித்து அவர் ஒசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி