பாகலூர் தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.

72பார்த்தது
பாகலூர் தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்தள்ள பாகலூர் பகுதியில் உள்ள வீடுகளில் அவ்வப்போது தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேஷ்புரம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சூளகிரி பகுதியை சேர்ந்த மாதேஷ் (24) எல்லப்பா (31) கேசவன் (22) என்பதும் இவர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையெடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மற்றம் வெள்ளிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி