போச்சம்பள்ளி: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகல் நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கீழ்குப்பம், பாரூர் மற்றும் பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.