கிருஷ்ணகிரி: 9-வது நாளாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையில் இருந்து 6, 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் நேற்று(அக்.24) 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் அண்டை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.