கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள புலியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகள் ஈஸ்வரி (22) பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இவர் பல இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் அடையவில்லை. நேற்று முன்தினம் இவர் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். இதைக் கண்ட அவரது பெற்றோர் ஈஸ்வரியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஈஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.