போச்சம்பள்ளி அரசு சித்தா மருத்துவமனையில் சித்தா கண்காட்சி

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு சித்தா மருத்துவமனையில் சித்த வைத்தியத்தின் தந்தை என போற்றப்படும் சித்தர் அகத்தியர் பிறந்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாள் தேசிய சித்த மருத்துவ தினமாக ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் சித்தா தினம் அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி சித்தா மருத்துவர் தனலட்சுமி தலைமை வகித்தார், இதில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி சித்தா கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு நோய்களுக்கான நோய் கண்டறிந்து. மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் சித்த மருத்துவ மூலிகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள் குறித்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிக்ளுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கம்பு தேனுறல் பொங்கல், கொண்டை கடலை சுண்டல், முருங்கை சூப் ஆகியவை வழங்கப்பட்டு பண்டைய கால உணவுமுறைகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் யோகா பயிற்சியாளர் விஜயகாந்த் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி