குடுமேனஹள்ளி கிராமத்தில் சென்றாயப்பெருமாள் கோவில் திருவிழா.

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடுமேனஹள்ளி கிராமத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கோவில் காளைக்கு பூஜைகள் செய்த பின் கோவிலுக்கு வந்து போது சாலையில் படுத்துக்கொண்ட பெண் பக்தர்கள் மீது காளை நடந்து சென்றது. பின்னர் கோவிலுக்கு சென்ற காளை மூலவர் பெருமாளை மண்டியிட்டு வணங்கியது. இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேலாக பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையில் பாரூர் காவல் ஆய்வாளர் சிவசந்தர் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி