போச்சம்பள்ளி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள அரசம்பட்டியில் உள்ள கோபிநாத பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை பரமபத வாசல் வழியாக கோபிநாத் பெருமாள் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான தங்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோபிநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் நான் அனைவருக்கும் பிரசாதம் அனுப்பப்பட்டது. சொர்க்கம் என்பது புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்குமிடம். அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற அரக்க சகோதரர்களுக்கும் கூட, பெருமாள் வைகுண்டத்தின் கதவை திறந்து தன் உலகிற்கு அவர்களை அழைத்துக் கொண்டார்.

அதை அனுபவித்த அரக்கர்கள் தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் “வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும், அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி