கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்னர்.
அதில் மத்தூர்அடுத்த குள்ளம்பட்டி அருகே கள்ளியூர் பகுதியை சேர்ந்த பிரதீப் (24) என்பவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.