குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்.

83பார்த்தது
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கே. புதூர், முங்கம்பட்டி, குள்ளம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 99 மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்கிற ஆசிரியை பணியாற்றி வந்தார். அவர் சொந்த விருப்பத்தின் பேரில் மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாறுதலாகி சென்றார். அந்த ஆசிரியை பள்ளிக்கு வராததால் பெரும்பாலான மாணவர்கள் மனவருத்தத்தில் பள்ளிக்கு வராமல் புறக்கணித்து வீட்டிலேயே இருந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியை கவிதேவி இப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வரவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி