கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நேரலக்கோட்டை பாலம்மா கோயில் அடுத்த காப்புக்காட்டு பகுதியில் வன காவலர் வெங்கடாஜலம் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து அவர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று உடலை மீட்டு சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.