மத்தூர் அருகே மத்தூரில் பீடா கடையில் பணம் திருட்டு

62பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பீடா கடை மற்றும் டீ ஸ்டால் கடை வைத்திருப்பவர் பாபு (43) இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று மீண்டும் அதிகாலை கடையை திறப்பதற்காக வந்த அப்போது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த டீத்தூள், சிகரெட் பாக்கெட்டுகள் 1,500 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி