கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையம் அருகில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமை யாளர் முரளிதரன் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு கடையின் அருகே உள்ள வீட்டில் தூங்க சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த போது சத்தம் கேட்கவே வீட்டில் இருந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து உரிமையாளர் கடையை திறந்து கல்லா பெட்டியை பார்த்தபோது பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் முரளிதரன் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார் அதன் புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்து அங்குள்ள சி. சி. டி. வி கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.