கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவகக்த்தில் முடிந்து அங்கு ஆர்ப்பாட்ட தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ். ஏ. சின்னசாமி தலைமை தாங்கினர். அதில் வெங்கடேஷன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் ஊர்வலம் தோடங்கி ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆண்டு மாங்காய் மகசூல் அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் மாவிற்கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.