கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீசார் ஒதிகுப்பம் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (56) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கபட்டது. அதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.