போச்சம்பள்ளியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
போச்சம்பள்ளியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவதையும் தாக்கப்படுவதையும் கண்டித்தும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் போச்சம்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்து உரையாற்றினார். பேசும்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்றங்களில் சிசிடிவி கேமரா, உரிய சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சங்கத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி