கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஅள்ளி கிராமத்தில் சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காளை உள்ளது. இந்த காளையை சாமியாக கிராமமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவில் காளை திடீரென காணமல் போனது இதனால் அப்பகுதி மக்கள் பல இடங்களில் தேடிபார்த்தனர்.
அப்போது ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் (27) என்பவர் காளையை கடத்தியது தகவலின் இளைஞர்கள் அங்கு சென்று புஷ்பராஜை பிடித்து கிராமத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் கோவில் காளையை வேனில் கடத்தி கேரளாவில் இறைச்சிக்காக விற்றது தெரியவந்தது.
இதையடுத்து பாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து புஷ்பராஜை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கேரளாவில் இருந்து கோவில் காளையை மீட்டு கிராமத்திற்கு மேலதாளங்களுடன் அழைத்து வந்து அதற்கு பொது மக்கள் ஆர்த்தி எடுத்து கேக் வெட்டியும் கொண்டாடினர்.