கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 4-ங்கு வழிசாலையில் காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீசார் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, உள்ளிட்ட பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சீட் பெல்ட் அணிவது குறித்தும், ஹெல்மெட் அணிவது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவி ஆய்வாளார்கள் பச்சமுத்து. சுதாகர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்