கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூர் வேளாங்கண்ணி பள்ளியில் இன்று (டிசம்பர் 8) இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை டாக்டர். இலாசியா தம்பிதுரை முகாமை துவக்கி வைத்தார். இதில் 30 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், பொதுமக்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, பல், உட்பட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர். இதில் பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.