கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள கீழ்குப்பம், மத்தூர், புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் கீழ்குப்பம் மேட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (45) தனது நிலத்தில் 2 ஏக்கருக்கும் மேல் பருத்தி சாகுபடி செய்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் பருத்தி செடிகள் தண்ணீர் மூழ்கி அழுகிய நிலையில், தற்போது சிவப்புநிற பூச்சிகள் தாக்குதலால் தரம் குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.