கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று இரண்டாம் நாளாக போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரூர், அரசம்பட்டி, புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதலே பனியின் தாக்கம் அதிகரித்தது. கடும் பனிப்பொழிவு நிலவியது. பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு இன்றும் பனி மூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஏற்றியவாறு சென்றனர்.