கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் விபத்தில் காயமடைந்த கரடியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் சட்டை பையில் இருந்த பணம் அங்கேயே சிதறி கிடந்தது. அந்த பணத்தை பத்திரமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரமேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் கிருஷ்ணனின் மகன் சுரேஷிடம் 43 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.