கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஊராட்சி ஐந்தாவது வார்டு கீழ்விதியில் மத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பர்வீன் தாஜ் சலீம் அவர்களுடைய பொது நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 மீட்டர் 325 அடி புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க இன்று திமுக மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குண. வசந்தரசு தலைமை வகித்தார்.
மத்தூர் ஒன்றிய குழு பெரும் தலைவர் விஜயலட்சுமி பெருமாள், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளரும் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ஜீவானந்தம், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் தனசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சகிர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் துணை அமைப்பாளர் வஜ்ஜிரவேல் மற்றும் கிளைச் செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தனர்.
இதில் ஒப்பந்ததாரர் சக்தி திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அருண், ஈச்சங்காடு கிளை பிரதிநிதி ரஜினி, BLA2 பாக முகவர் முபாரக், அப்பகுதியின் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.