கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சார்பில் வருடாந்தோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பர்கூர் பேருந்து நிலையம் பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.