கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அகரம் அடுத்த தட்டரஅள்ளி கிராமத்தில் உள்ள கக்கு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்று (டிசம்பர் 9) வருட பூஜை நடைபெற்றது. இதில் மூலவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் தர்மகர்த்தாக்கள், பங்காளிகள் குடும்பங்கள் சேர்ந்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.