மே.வ: பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியை சேர்ந்த பிமல் மொண்டல் என்ற நபருக்கும் அவரது அண்ணனின் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மே.31) காலை பிமல் மற்றும் அவரது அண்ணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிமல், சதியின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்பின் தெருவில் தனது அண்ணியின் தலையோடு நடந்து சென்ற பிமல், நேராக காவல் நிலையத்திற்கு சென்று போலீசிடம் சரணடைந்தார்.