குவைத் மன்னர் காலமானார்.. இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு

1073பார்த்தது
குவைத் மன்னர் காலமானார்.. இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா (86) சனிக்கிழமை காலமானார். முந்தைய மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவுக்கு பிறகு, ஷேக் நவாஃப் 2006 இல் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு பிறந்த ஷேக் நவாப், 2020 செப்டம்பரில் குவைத்தின் ஆட்சியை ஏற்று மன்னராக மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இந்திய அரசு உத்தரவின் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி