சேலம்: எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்த தனுஷ்கண்ணனை ரோஷினி என்ற பெண் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜன.21 அன்று 5 மாத கர்ப்பிணியான ரோஷினியை அவரது உறவினர்கள் கடத்தினர். இதையடுத்து, ரோஷினியை மீட்டுள்ள போலீசார் அப்பெண்ணின் தந்தை, தாய், சகோதரரர், சகோதரி உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.