2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி என்ற இலக்குடன் அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகள் நியமனம், உள்ளூர் பிரச்சனைக்கு போராட்டம் என களப்பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. மாற்று கட்சியினரும் தங்களை தவெகவில் இணைத்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை விசிகவில் நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பாஜக, அதிமுகவில் இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டு ஏற்கனவே அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.