திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று அக்டோபர் 8ஆம் தேதி நடக்க உள்ளது. ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி அடைகின்றனர். இதனையொட்டி, மாலை 3:30 மணிக்கு நடைபெறும் இந்த பெயர்ச்சி விழாவையொட்டி மதியம் 3 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் கோவில் கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் ராகு கேது மூல மந்திர ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோவிலில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.