தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்பு அளித்தார். நாளை (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர்.