கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அருள்மிகு கமலநாயகி உடனுறை நீலமேகப்பெருமாள் கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் திருவிழா முன்னிட்டு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முன்னதாக தேர் ஏறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற வைகாசி விசாக தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக பஜனைமடம், எம்பிஎஸ் அக்ரஹாரம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.