சேலம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்தவர் நீலா 27. திருமணம் ஆகாத இவர் இன்று சேலத்திலிருந்து குளித்தலை வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காரைக்குடி செல்ல பயணம் மேற்கொண்டு உள்ளார்.
குளித்தலை ரயில் நிலையத்தில் மாலை 4: 30 மணி அளவில் நடை மேடை எண் 1 ல் வந்து நின்றபோது நீலா ரயில் நிலையத்தில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறுவதற்காக சென்றுள்ளார்.
அச்சமயம் ரயில் புறப்பட்ட போது நீலா ரயிலில் ஏரிய போது கால் தவறி பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளத்திற்கு இடையே விழுந்ததில் ரயில் சக்கரம் ஏரி இரு கால்களையும் இழந்தார்.
சம்பவம் அறிந்ததும் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட நீலா குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.