பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாரத பிரதமர் மோடிஜிக்கும், இந்திய திருநாட்டின் முப்படை வீரர்களுக்கும், வீர பெண்மணிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சி தோகைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமையில் மூவர்ண கொடி யாத்திரை நெய்தலூர் காலனி கடைவீதியில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளார் ராஜாபிரதீப், மாவட்ட பொதுச்செயலாளார் சாமிதுரை, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நமஞ்சிவாயம் ஆகியோர் சிறப்புறை ஆற்றினர்.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜவேல், தோகைமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில் குமார் மற்றும் தோகைமலை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.