விசிக சார்பில் ரயில் மறியல் போராட்டம்

83பார்த்தது
டாக்டர் அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்துநிலையத்திலிருந்து விசிக மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் பேரணியாக கண்டன கோஷமிட்டவாறு குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்தவர்களை குளித்தலை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது பேரிகார்டை தள்ளிகொண்டு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்துவதில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாஜக மோடி அரசை விமர்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டம் செய்த விசிக வை சேர்ந்த 33 நபர்கள் குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வில் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி