கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதனைத் தொடர்ந்து சுமார் இரவு 7 மணி அளவில் வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலத்த கனமழை வீச தொடங்கியது. 2 மணி நேரமாக விட்டு விட்டு பெய்த கனமழையால் குளித்தலையில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தையில் தங்களது காய்கறிகளை கொண்டு வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர். தொடர் மழையால் பொதுமக்களும் காய்கறிகள் வாங்க
வராமல் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.