வளையப்பட்டியில் விசிக சார்பில் முப்பெரும் விழா

65பார்த்தது
எழுச்சித்தமிழர் ஆணைக்குழுங்க கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை ஒன்றியம் சார்பில் வலையபட்டி அம்பேத்கார் நகரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் 134வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குளித்தலை ஒன்றிய செயலாளர் மாயவன் தலைமையில் கட்சி கொடி ஏற்றுதல், மரக்கன்று நடுதல், அன்னதானம் வழங்குதல் என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் (எ) ஆற்றலரசு கலந்துகொண்டு அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தாய்மண் சூர்யா, ராஜசேகர், வேப்பங்குடி அரவிந்த் மற்றும் விசிக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி