தோப்ராப்பட்டி பிரிவு- டூவீலர்- சரக்கு வாகனம் மோதி விபத்து.

83பார்த்தது
தோப்ராப்பட்டி பிரிவு டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நெல்லி கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் வயது 56.

இவர் ஜூலை 25ஆம் தேதி காலை 11: 30 மணி அளவில், ஈசநத்தத்திலிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.


இவரது வாகனம் தோப்ராப்பட்டி பிரிவு அருகே சென்றபோது,

எதிர் திசையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம், கலைச்செல்வன் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த கலைச்செல்வனை கரூரில் உள்ள ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி