குளித்தலை: போதையில் வாலிபர்கள் போலீசாரிடம் பிரச்சனை...

2564பார்த்தது
குளித்தலை: போதையில் வாலிபர்கள் போலீசாரிடம் பிரச்சனை...
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் அந்தப் பகுதியில் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். அங்கு சென்று போக்குவரத்து போலீசார் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியை போலீசார் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாவியை எப்படி எடுக்கலாம் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையில் அமர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த அந்த நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் மது போதையில் வாலிபர் பிரச்சினை செய்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி