ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து 35க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு லாலாபேட்டை அருகே சென்றுள்ளது. அப்போது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலையைச் சேர்ந்த அன்பு (41) என்பவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல்நிலை சரியில்லாததை தெரிந்து கொண்ட ஓட்டுநர் சாலை ஓரமாக பேருந்து நிறுத்திவிட்டார். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாலாபேட்டை பேருந்து நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்த வியாபாரிகள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ஓட்டுநரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்து பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்,