தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

681பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். அதில் கட்டளை தென்கரை வாய்க்கால்கள் பாசனம் மூலம் பத்தாயிரம் ஹெக்டர் பரப்பளவில் வாழை, நெல், கரும்பு, வெற்றிலை விவசாயம் செய்து வருவதாகவும், மேட்டூரில் தண்ணீர் குறைவாக இருந்ததால் இரு பாசன வாய்க்காலிலும் குருவை நெல் சாகுபடி செய்ய இயலவில்லை. நீண்ட கால பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளோம். பயிர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. அப்படி தண்ணீர் இல்லை எனில் பயிர் முழுவதும் அழியும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் வாழை, கரும்பு, வெற்றிலை மூன்றும் மறு தாம்பு விடும் பயிர்கள் என்பதால் தண்ணீர் இல்லை என்றால் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் இதன் பாதிப்பு இருக்கக்கூடும். எங்கள் வாழ்வாதார முற்றிலும் பாதிப்படையும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கலியமூர்த்தியிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி