குளித்தலை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
குளித்தலை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் குளித்தலை ஒன்றிய கிளை சார்பில் குளித்தலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழக அரசு ரூபாய் 3000/- தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிட்டதை கண்டித்தும், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850/- வழங்கிட வேண்டும், காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே அமுல் படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தோழர் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தோழர் வினோதா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் குளித்தலை வட்டக்கிளை செயலாளர் தோழர் பரிமனம் வாழ்த்துரை வழங்கினார். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் பொன் ஜெயராம் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார். இறுதியாக ஒன்றிய இணைச் செயலாளர் தோழர் சித்ரா நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி