கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் தலைமையில் ஆதரவு நிலை போராட்டம் நேற்று இரவு நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமையை தடுக்காதே என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.