தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் வசிக்கும் திருச்சி மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் சொந்தமான இடங்களில் தமிழக காவல்துறை சமூக விரோதி போல சித்தரித்து நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக திருச்சி மாநகர காவல்துறை சோதனை செய்துள்ளனர்.
இதை கண்டிக்கும் விதமாக தமிழர் தேசம் கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் அருள்ராஜ் தலைமையில் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனையடுத்து சாலை மறியல் செய்த 20 பேரை குளித்தலை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று அறிஞர் அண்ணா மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.