கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மழை நீரால் மண் சரிவு ஏற்பட்டு கரடு முரடாக உள்ளது. இராஜேந்திரம் ஊராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலை அமைத்து இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என இராஜேந்திரம் சிபிஐஎம் கிளை நிர்வாகி சிவா மற்றும் சமூக ஆர்வலர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.