காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய கொள்கை விளக்க பேரணி

68பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்திய கொள்கை விளக்க பேரணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிராபகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.

சுங்ககேட் பகுதியில் துவங்கிய பேரணியானது பேருந்து நிலையம், பஜனை மடம் வழியாக பெரிய பாலம் வந்து நிறைவடைந்தது.

காந்திய கொள்கைகள் குறித்து கோஷங்களும், குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலையை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

அதனை தொடர்ந்து பெரிய பாலத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியினர் குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலையை அகற்ற நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வருந்ததக்கது. காந்தி அரசியல் தலைவரோ, உள்ளூர் தலைவரோ இல்லை இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசிய தலைவர். அவரது திருவுருவ சிலையை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் விட மாட்டோம் என குளித்தலை நகராட்சியை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் தலைவர் சி. ஆறுமுகம், வ. பொ. செயலாளர் பாலசந்தர், வட்டார து. தலைவர் கோவிந்தன், மாவட்ட பொதுசெயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி