கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ தாளியாம்பட்டி பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.
இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மேல்நிலை நீர் தாக்கத் தொட்டியின் அஸ்திவார தூண்கள் பழுதடைந்ததால் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தம் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த இன்று வந்துள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரத்தை பெற்றுத் தந்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.