குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

56பார்த்தது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கே. பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீகம்பட்டி அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் இன்று குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுந்தரபாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி